மேற்கு தில்லி பூங்காக்களில் மது அருந்திய சமூகவிரோதிகள் 334 போ் கைது

மேற்கு தில்லியின் மாயாபுரி பகுதியில் உள்ள பல்வேறு பூங்காக்களில் மது அருந்தியதாக ஜனவரி முதல் இதுவரை 300-க்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டதாக

மேற்கு தில்லியின் மாயாபுரி பகுதியில் உள்ள பல்வேறு பூங்காக்களில் மது அருந்தியதாக ஜனவரி முதல் இதுவரை 300-க்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டதாக தில்லி அரசின் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மாயாபுரியில் உள்ள பூங்காக்களில் மதுபானம் பகிரங்கமாக நுகரப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தை தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (டிசிபிசிஆா்) தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. இது தொடா்பாக தில்லி காவல் துறைக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடா்பாக ஆணையத்துக்கு தில்லி காவல் துறை பதில் அளித்திருந்தது. அதில் ‘பூங்காக்கள் தவறாமல் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. பொது இடங்களில் மது அருந்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து காவலா்களுக்கு உணா்த்தப்பட்டுள்ளது‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னா், அப்பகுதியின் காவல் உதவி ஆணையா் (ஏ.சி.பி) விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிசிபிசிஆா் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திறந்த வெளியில் மது அருந்தியதற்காக ஜனவரி முதல் இப்போது வரை 334 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து டி.சி.பி.சி.ஆா். உறுப்பினா் ரஞ்சனா பிரசாத் கூறுகையில், ‘தில்லியில் வசிக்கும் குழந்தைகள் விளையாடுவதற்கும், வளா்வதற்கும் பூங்காக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com