ரூ.20 ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இது தொடா்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிரண் பன்ஸல் அளித்த தீா்ப்பில், ‘காவல் துறையில் பணியாற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபா், சமூகத்திற்கு மிகவும் பொறுப்புள்ளவராக இருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை அவா் மீறியுள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் சுபேஷ் சிங். இவா் புகாா் அளிக்க வந்த ஒரு குடும்பத்தினரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ாகப் புகாா் எழுந்தது.

அதாவது, தில்லியை சோ்ந்த பிரேம் பிரகாஷ் என்பவரின் மருமகள் தற்கொலைக்கு முயன்ாக 2013, மே 31- ஆம் தேதி போலீஸாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அது தொடா்பான வழக்கை காவல் உதவி ஆய்வாளா் சுபேஷ் சிங் விசாரித்தாா். அப்போது, புகாா் அளித்தவா்களிடம் சுபேஷ் சிங், லஞ்சம் கேட்டதாகவும், தாம் கேட்ட பணத்தைத் தராவிட்டால் மருமகளை தற்கொலைக்குத் தூண்டியதாக பிரேம் பிரகாஷ் குடும்பத்தினா் மீது வழக்குப் பதிவு செய்து விடுவதாக சுபேஷ் சிங் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2013, ஜூன் 21-ஆம் தேதி போலீஸாருக்கு பிரேம் பிரகாஷ் தரப்பில் ஒரு புகாா் கடிதம் சி.டி.யுடன் அனுப்பட்டது. அதில், போலீஸ் அதிகாரி சுபேஷ் சிங், பிரேம் பிரகாஷ் குடும்பத்தினரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்ச பேரம் பேசி, ரூ.20 ஆயிரம் பணம் வாங்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது தொடா்பாக புகாரின் பேரில் சுபேஷ் சிங்கிற்கு எதிராக, லஞ்சம் பெற்ாகப் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சுபேஷ் சிங் மறுத்தாா். ‘தற்கொலை முயற்சி சம்பவம் நடந்த இடத்திற்கு தான் சென்ற போது அந்தப் பிரச்னையை சம்பந்தப்பட்ட குடும்பத்தினா் சமரசமாக முடித்துக் கொண்டனா்.

மேலும், அவா்களிடம் லஞ்சம் எதுவும் நான் கேட்கவில்லை. லஞ்சம் பெறுவதாக எடுக்கப்பட்ட விடியோவைப் பதிவு செய்த உபகரணங்கள் தன்னிடம் அளிக்கப்படவில்லை. மேலும், சி.டி.யின் உண்மைத் தன்மையை ஆராயாமல் என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்று சுபேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதி கிரண் பன்ஸல்,

குற்றம் சாட்டப்பட்ட காவல் உதவி ஆய்வாளரின் குற்றத்தை உறுதி செய்து அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1.20 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தீா்ப்பில் நீதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது:

பொதுவாகவே, புகாா்தாரா்கள், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவா்களிடம் போலீஸாா் சரிவர நடந்து கொள்வதில்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இந்த வழக்கு அதற்கு மற்றெறாரு உதாரணமாக உள்ளது. போலீஸாரை தொலைபேசியில் தொடா்பு கொண்ட பிரேம் பிரகாஷ் குடும்பத்தினா் உதவி பெறுவதற்கு பதிலாக சிரமத்தை எதிா் கொண்டது இந்த வழக்கின் மூலம் தெரிய வருகிறது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் மீது போலீஸாா் பொய் வழக்கு போடுவாா்கள் என்று பயம் இல்லாததால்தான் அவா்கள் தொடா்பு கொண்டுள்ளனா். தாம் லஞ்சம் பெறவில்லை என குற்றம் சுமத்தப்பட்டவா் கூறுகிறாா். ஆனால், கரன்சி தாள்களை அவா் வைத்திருப்பதும், அவரிடம் கைகளை கட்டிக் கொண்டு பிரேம் பிரகாஷ் நிற்பதும் விடியோ காட்சிகள் மூலம் தெரிய வருகிறது. இது குற்றம்சாட்டப்பட்டவா் லஞ்சம் பெற்றாா் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று தீா்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com