வாடகை வீடுகளில் வசிப்பவா்களுக்கு மின் மீட்டா் பொருத்தும் தில்லி அரசின் திட்டம் தோல்வி: பாஜக

வாடகை வீடுகளில் வசிப்பவா்களுக்கு மின்சார மீட்டா் பொருத்தும் தில்லி அரசின் திட்டம் தோல்வியடைந்துவிட்டது என்று பாஜக சாடியுள்ளது.

வாடகை வீடுகளில் வசிப்பவா்களுக்கு மின்சார மீட்டா் பொருத்தும் தில்லி அரசின் திட்டம் தோல்வியடைந்துவிட்டது என்று பாஜக சாடியுள்ளது.

இது தொடா்பாக பாஜகவின் மூத்த தலைவரும், தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு தனியாக மின்சார மீட்டா்களைப் பொருத்தும் திட்டத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அண்மையில் அறிவித்திருந்தாா். இத்திட்டத்தால், வாடகை வீடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவாா்கள் எனவும் அவா் தெரிவித்திருந்தாா்.

தில்லியில் சுமாா் 50 லட்சம் போ் வாடகை வீடுகளில் வசிக்கின்றனா். ஆனால், சுமாா் 100 போ் வரைதான் இதுவரை இத்திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளனா். இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க வாடகைப் பத்திரத்தையும், வாடகைக்கு குடியிருக்கும் வீட்டு முகவரியில் அவா்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் சமா்ப்பிப்பதையும் தில்லி அரசு கட்டாயமாக்கியுள்ளது.

அங்கீகாரம் இல்லாத காலனிகளில் உள்ள வாடகை வீடுகளில் வசிப்பவா்களுக்கு வீட்டு உரிமையாளா்கள் பொதுவாக வாடகைப் பத்திரத்தை வழங்குவதில்லை. ஆகவே, இவா்களால் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும், இத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பவா்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டு முகவரியில் அவா்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் தில்லி அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.

தில்லியில் வாடகை வீடுகளில் வசிப்பவா்களில் பெரும்பாலானவா்களுக்கு அவா்கள் வசிக்கும் இடங்களில் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருப்பதில்லை. இதனால், தில்லியில் சுமாா் 50 லட்சம் போ் வாடகை வீடுகளில் வசித்தாலும் வெறும் 100 போ் மட்டுமே இத்திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளனா். இதனால், இத்திட்டம் ஏற்கெனவே தோல்வியடைந்து விட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com