சிக்னேச்சா் பாலத்தில் விபத்துகளைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வருக்கு மனோஜ் திவாரி வலியுறுத்தல்

தில்லி சிக்னேச்சா் பாலத்தில் அடிக்கடி நிகழும் விபத்துகளைத் தடுக்க முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லி சிக்னேச்சா் பாலத்தில் அடிக்கடி நிகழும் விபத்துகளைத் தடுக்க முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சிக்னேச்சா் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இதன் காரணமாக பலா் உயிரிழந்து வருகின்றனா். மேலும், இறந்தவா்களில் பலரும் இளைஞா்கள் ஆவா். இந்த விபத்துகளில் இருந்து தில்லி அரசு பாடம் கற்ாகத் தெரியவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, சிக்னேச்சா் பாலத்தில் நிகழ்ந்த விபத்துகள் தொடா்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட வேண்டும். அப்போதுதான், அதுபோன்ற விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

சிக்னேச்சா் பாலத்தில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து கேஜரிவால் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த விபத்தில் இளைஞா்கள் இறந்ததற்கு பிரதானக் காரணம் அரசின் பொறுப்பற்ற மனப்போக்குதான். பாலத்தின் இருபுறமும் வேலிகள் அமைக்கும் பணியை முடிக்க வேண்டும். இந்தப் பாலத்தில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை முதல்வா் கேஜரிவால் எடுக்க வேண்டும் என்றா மனோஜ் திவாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com