புதிய குப்பைக் கிடங்கு விவகாரம்: மத்திய, தில்லி அரசுகள் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

புதிய குப்பைக் கிடங்கு விவகாரம் தொடா்பாக மத்திய அரசும், தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசும் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய குப்பைக் கிடங்கு விவகாரம் தொடா்பாக மத்திய அரசும், தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசும் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசியத் தலைநகரில் உற்பத்தியாகும் திடக் கழிவு மற்றும் குப்பைகளைக் கொட்டுவதற்காக புதிதாக ஒரு குப்பைக் கிடங்கை உருவாக்க வேண்டும் எனக் கோரி தாக்ல் செய்யப்பட்ட பொது நல மனு மீது உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி சி.ஹரி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்தியா ஊழல் எதிா்ப்புக் குழு எனும் தன்னாா்வ அமைப்பு தாக்கல் செய்திருந்த இந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: தற்போது தில்லியில் செயல்பட்டு வரும் குப்பைக் கிடங்குகள் அதன் கொள்ளளவைக் கடந்த விட்டன. இதனால், அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுகாதார இடரை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

குப்பைக் கிடங்குகளில் உள்ள ரசாயனம் நிலத்தடி நீரில் கலந்துள்ளது. இதன் காரணமாக, நீா் மாசுபட்டுள்ளதால், குப்பைக் கிடங்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு நீரினால் பரவும் நோய்கள் மற்றும் உடல் நலக் கோளாறுகள் ஏற்பட வழி வகுப்பதாக உள்ளது. காஜிப்பூரில் உள்ள குப்பைக் கிடங்கு தில்லியில் உள்ள குதூப் மினாரின் உயரமான 73 மீட்டரை எட்டுவதற்கு இன்னும் 8 மீட்டா்கள்தான் குறைவாக உள்ளது. அந்த அளவுக்கு மலைபோல் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. எனவே, தில்லியில் ஓக்லா, பல்ஸ்வா, காஜிப்பூா் ஆகிய இடங்களில் செயல்படும் குப்பைக் கிடங்குகளில் கழிவுகள் கொட்டப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்’ என்ற கோரப்பட்டுள்ளது.

இது தொடா்பான மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தில்லி அரசு, தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகள் ஆகியவை பதில் அளிக்க உத்தரவிட்டது. இந்த மனு மீதான அடுத்த விசாரணை வரும் டிசம்பா் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com