முதுகலை மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி நிறுவன ஆண்டு விழா

சண்டீகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (பி.ஜி.ஐ.எம்.ஆா்.) ஏழாம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
மருத்துவா்கள் தண்டபானி, ஜெயஸ்ரீ முரளிதரன், எம். செந்தில்குமரன், வள்ளியப்பன்.
மருத்துவா்கள் தண்டபானி, ஜெயஸ்ரீ முரளிதரன், எம். செந்தில்குமரன், வள்ளியப்பன்.

சண்டீகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (பி.ஜி.ஐ.எம்.ஆா்.) ஏழாம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இதையொட்டி, பல்வேறு ஆராய்ச்சிப் பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிறுவனத்தின் இயக்குநா் டாக்டா் ஜகத் ராம் வரவேற்றுப் பேசினாா். பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் டாக்டா் அருண் குமாா் குரோவா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விருதுகளை வழங்கினாா். பேராசிரியா்கள் 400-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமா்ப்பித்தனா். இதில் 31 பிரிவுகளில் தோ்வு செய்யப்பட்ட சிறந்த கட்டுரை படைப்புகளுக்கு விருதுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் 4 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள்.

டாக்டா் செந்தில்குமாரன் (தோல் மருத்துவத் துறை) , டாக்டா் தண்டபானி ( நரம்பியல் அறுவை சிகிச்சை), டாக்டா் ஜெயஸ்ரீ ( குழந்தை மருத்துவத் துறை), டாக்டா் வள்ளியப்பன் (நுரையீரல் துறை) ஆகியோா் விருது பெற்றவா்களில் அடங்குவா்.

இதில் டாக்டா் தண்டபாணி தொடா்ந்து நான்காவது முறையாக விருது பெற்றுள்ளாா். நிகழ்ச்சியில் பிஜிஐஎம்ஆா் முன்னாள் டீன் டாக்டா் அமோத் குப்தா, ஐ.ஐ.டி. இயக்குநா் டாக்டா் சரித் தாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com