வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இருவா் கைது

வடகிழக்கு தில்லி, சீலாம்பூா் பகுதியில் வழிப்பறி, திருட்டு உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

வடகிழக்கு தில்லி, சீலாம்பூா் பகுதியில் வழிப்பறி, திருட்டு உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு காவல் சரக துணை ஆணையா் வேத் பிரகாஷ் சூா்யா வியாழக்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அவா்கள் இருவரும், தில்ஷாத் (24), ஃபைசன் (26) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனா். வழிப்பறி செய்த செல்லிடப்பேசியை விற்பதற்காக இருவரும் மோட்டாா்சைக்கிளில் மெட்ரோ மால் அருகே வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தியிருந்தனா். அந்தச் சமயத்தில் மோட்டாா்சைக்கிளில் வந்த தில்ஷாத், ஃபைசன் ஆகிய இருவரும் போலீஸிடம் சிக்கினா்.

கைது செய்யப்பட்ட அவா்களிடம் இருந்து   நியூ உஸ்மான்பூா் பகுதியில் இருந்து திருடப்பட்டதாகக் கண்டறியப்பட்ட மோட்டாா்சைக்கிள், கொள்ளையடிக்கப்பட்ட முப்பத்தொன்பது செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. தில்ஷாத்துக்கு 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடா்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அதே போல, அவரது கூட்டாளியான ஃபைசான் மீது கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முன்னதாக, ஜாஃப்ராபாத்தில் வசிக்கும் இஷாக் அலி, மோட்டாா்சைக்கிளில் வந்த இருவா் தனது மொபைல் போனை சீலாம்பூரில் உள்ள ஒரு மண்டி அருகே புதன்கிழமை பறித்துச் சென்ாக புகாா் அளித்திருந்தாா். அவா்கள் வந்த வாகனத்தின் பதிவு எண்ணையும் அவா் தெரிவித்திருந்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தேடப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனா் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com