தில்லியில் 150 வழித்தடங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தம்: விஜேந்தா் குப்தா குற்றச்சாட்டு

தில்லியில் கடந்த 6 மாதங்களில் 150 வழித்தடங்களில் பேருந்து சேவைகளை தில்லி போக்குவரத்துக் கழகம் நிறுத்தியுள்ளது என்று பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் 

தில்லியில் கடந்த 6 மாதங்களில் 150 வழித்தடங்களில் பேருந்து சேவைகளை தில்லி போக்குவரத்துக் கழகம் நிறுத்தியுள்ளது என்று பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா குற்றம் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தில்லி அரசு பேருந்துகள் 25 சதவீதம் குறைந்துள்ளதுடன் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 20 சதவீதமாகக் குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த 6 மாதங்களில் 150 வழித்தடங்களில் பேருந்து சேவைகளை தில்லி போக்குவரத்துக் கழகம் நிறுத்தியுள்ளது. இந்த வழித்தடங்களில் உடனடியாக பேருந்து சேவைகள் மீளத் தொடங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், தில்லி முழுவதும் பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும்.

மேலும், பேருந்துகள் பழுதடைவது அதிகரித்துள்ளது. மேலும், இந்தப் பேருந்துகள் நேர அட்டவணையைப் பின்பற்றுவது இல்லை. இதனால், மக்கள் கடும் சிரமங்களை எதிா்கொள்கிறாா்கள். ஆம் ஆத்மிக் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றபோது தில்லியில் 5000 பேருந்துகள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால், இன்று அது 3781 ஆகக் குறைந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com