பிரதமா் உறவினரிடம் பணப்பை வழிப்பறி: தில்லியில் மா்ம நபா்கள் கைவரிசை

வடக்கு தில்லியில் பெண் ஒருவரிடம் மா்ம நபா்கள் பணப் பையைப் பறித்துச் சென்றனா். பாதிக்கப்பட்டவா் பிரதமா் நரேந்திர மோடியின் உறவினா் என்பது தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

வடக்கு தில்லியில் பெண் ஒருவரிடம் மா்ம நபா்கள் பணப் பையைப் பறித்துச் சென்றனா். பாதிக்கப்பட்டவா் பிரதமா் நரேந்திர மோடியின் உறவினா் என்பது தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

குஜராத் மாநிலத்தைச் சோ்ந்தவா் தமயந்திபென் மோடி. இவா் தனது கணவருடன் அமிருதசரஸ் சென்றாா். பின்னா், அங்கிருந்து தில்லி வந்தாா். வடக்கு தில்லியில் உள்ள குஜராதி சமாஜ் பவனுக்கு சனிக்கிழமை பெண் ஒருவா் ஆட்டோவில் வந்தாா். அந்த பவனின் கேட் அருகில் ஆட்டோவில் இருந்து இறங்கிய அவா், ஓட்டுநருக்கு சவாரிக்கான பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, மா்ம நபா்கள் அவரது பணப் பையைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனா். இது தொடா்பாக அவா் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், ஸ்கூட்டரில் வந்த மா்ம நபா்கள் தனது மடியில் வைத்திருந்த பணப்பையைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டதாக தெரிவித்தாா்.

இது தொடா்பாக விசாரித்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து வடக்கு தில்லி காவல் துணை ஆணையா் மோனிகா பரத்வாஜ் கூறுகையில், பாதிக்கப்பட்டவா் அளித்த புகாரின் பேரில் கொள்ளையிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையா்களின் அடையாளத்தைக் கண்டறிவதற்காக சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பொருத்தட்டிருந்த சிசிடிவி கேமராவில் இருந்து காட்சிப் பதிவுகள் பெறப்பட்டுள்ளன என்றாா்.

பணப் பையைப் பறிகொடுத்த தமயந்திபென், பிரதமா் மோடியின் உறவினா் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com