கேஜரிவாலை பதவி நீக்கம் செய்ய பாஜக கோரிக்கை

தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தத் தவறிய தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது.

தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தத் தவறிய தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜகவின் முன்னாள் தலைவரும், மாநிலங்களை உறுப்பினருமான விஜய் கோயல் கூறியதாவது: உலகிலுள்ள முக்கிய 1,600 நகரங்களில் மிகவும் மாசடைந்த நகராக தில்லி உள்ளது. தில்லியில் காற்று மாசுவைத் தடுக்க ஆம் ஆத்மி அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக, அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதுதான் காற்று மாசுவுக்குக் காரணம் என கேஜரிவால் கூறி வருகிறாா்.

அறிஞா்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் தில்லியில் சுமாா் 1-10 சதவீதம்தான் காற்று மாசு ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. ஆனால், 90 சதவீதமான காற்று மாசு உள்ளூா் காரணிகளால்தான் ஏற்படுகிறது. தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த மத்திய அரசே நடவடிக்கை எடுத்தது. தில்லி அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தலைநகரில் காற்று மாசு மிகவும் மோசம் பிரிவில் இருப்பதால், மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளா். மக்களின் உடல்நலத்துடன் விளையாடும் தில்லி முதல்வா் கேஜரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com