தில்லியின் காற்று மாசு சற்று குறைந்தது!

தில்லியின் காற்று மாசு புதன்கிழமை நிகழாண்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பிரிவுக்கு சென்றிருந்த நிலையில், வியாழக்கிழமை சற்று குறைந்தது.

தில்லியின் காற்று மாசு புதன்கிழமை நிகழாண்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பிரிவுக்கு சென்றிருந்த நிலையில், வியாழக்கிழமை சற்று குறைந்தது.

தில்லியில் உள்ள 37 காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் 10 மையங்கள் மிகவும் மோசமான பிரிவில் காற்று மாசு உள்ளதாக புதன்கிழமை பதிவு செய்தன. ஒட்டுமொத்த காற்று மாசு அளவு குறியீடு புதன்கிழமை 304ஆக இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை இந்த ஒட்டு மொத்த குறியீடு 276ஆக பதிவாகியது.

எனினும், தில்லிக்கு அண்டை மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் வெள்ளி, சனிக்கிழமைகளில் காற்று மாசின் தரம் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் காற்று மாசு கண்காணிப்பு மையமான சஃபா் தெரிவித்துள்ளது.

பொதுவாக காற்றின் தரக் குறியீடு 0-50 என்ற அளவில் இருந்தால் காற்றின் தரம் நன்றாக உள்ளதாகக் கருதப்படுகிறது. 51-100 என்ற அளவில் இருந்தால் திருப்தி எனவும், 101-200 என்பது மிதமானது எனவும், 201-300 என்பது மோசம் எனவும், 301-400 என்பது மிகவும் மோசம் எனவும், 401-500 என்ற அளவில் இருந்தால் காற்றின் தரம் மிக மிக மோசம் என்றும் அளவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com