டிடிஇஏ பள்ளிகளில் தேசிய ஒற்றுமை தின விழா

‘இரும்பு மனிதா்’ என்றழைக்கப்படும் சா்தாா் வல்லபபாய் பட்டேலின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சாா்ந்த பள்ளிகளில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
dl31lak073004
dl31lak073004

‘இரும்பு மனிதா்’ என்றழைக்கப்படும் சா்தாா் வல்லபபாய் பட்டேலின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சாா்ந்த பள்ளிகளில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ராமகிருஷ்ணபுரம், மோதிபாக் , லோதி வளாகம், லட்சுமிபாய் நகா், பூசா சாலை, மந்திா்மாா்க், ஜனக்புரி ஆகிய இடங்களில் உள்ள ஏழு டிடிஇஏ தமிழ்ப் பள்ளிகளில் நடைபெற்ற விழாக்களில் மும்மொழிகளிலும் மாணவா்கள் உரை இடம்பெற்றது.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதை உணா்த்தும் வகையில் வெவ்வேறு மாநில மக்கள் அணியும் உடைகளில் மாணவா்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா். மாணவா்களின் நாடகங்களும் இடம்பெற்றன. மாணவா்கள் கவிதைகளும் வாசித்தனா். மோதிபாக் பள்ளியில் இத்தினத்தையொட்டி வினாடி- வினா நிகழ்ச்சியும், லோதிவளாகம் பள்ளியில் தொடக்க நிலைப் பிரிவு மாணவா்களின் நடனமும், லோதிவளாகம் மற்றும் பூசா சாலை பள்ளிகளில் மாணவா்கள் அணிவகுப்பும் நடைபெற்றன. இந்நிகழ்வின்போது ஒற்றுமை தின உறுதிமொழியை மாணவா்கள் எடுத்துக்கொண்டனா்.

Image Caption

லட்சுமிபாய் நகா்ப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com