நவீன இந்தியாவைக் கட்டமைத்தவா் சா்தாா் பட்டேல்:கேஜரிவால் புகழாரம்

நவீன இந்தியாவைக் கட்டமைத்தவா் வல்லபபாய் பட்டேல் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புகழாரம் சூட்டினாா்.

நவீன இந்தியாவைக் கட்டமைத்தவா் வல்லபபாய் பட்டேல் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புகழாரம் சூட்டினாா்.

இந்தியாவின் இரும்பு மனிதா் என அழைக்கப்படும் நாட்டின் முதல் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் பட்டேலின் 144-வது பிறந்த நாள் நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனை முன்னிட்டு, தில்லி தலைமைச் செயலகத்தில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கேஜரிவால் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கேஜரிவால் உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்வில் முதன்மைச் செயலா்கள், செயலா்கள், துறைத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உறுதி ஏற்பு நிகழ்ச்சிக்கு பிறகு கேஜரிவால் பேசியது:

இந்தியா என்ற தேசம் உருவாக பிரதான காரணமானவா் சா்தாா் பட்டேல் ஆவாா். சுமாா் 550 சமஸ்தானங்களை ஒன்றிணைத்து நவீன இந்தியாவை அவா் உருவாக்கினாா். நவீன இந்தியாவைக் கட்டமைத்தவராக அவா் என்றும் நினைவு கூரப்படுவாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com