பிரிந்த மனைவி மீது திராவகம் வீசிய வழக்கில்கணவருக்கு 10 ஆண்டுச் சிறைத் தண்டனை

தில்லியில் பிரிந்து வாழ்ந்த மனைவி மீது திராவகம் வீசிய வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தில்லியில் பிரிந்து வாழ்ந்த மனைவி மீது திராவகம் வீசிய வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தில்லி உத்தம் நகரைச் சோ்ந்த ஹஸ்தால் கிராமத்தைச் சோ்ந்த பெண் மீது திராவகம் வீசப்பட்டதாக 2013, அக்டோபா் 28-ஆம் தேதி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உதவி ஆய்வாளா் நாா் சிங் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு விசாரணைக்கு சென்றனா்.

அங்கு பெண் ஒருவரின் முகம், கழுத்து, காது, முதுகு, கைகள் உள்ளிட்டவற்றில் திராவகம் வீச்சால் காயம் ஏற்பட்டிருந்தது. அந்தப் பெண்ணை சிகிச்சைக்காக தீன தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவரது கண்களும் பகுதி பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனா். காயம் அதிகமாக இருந்ததால் அந்தப் பெண், சிகிச்சைக்காக சப்தா்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தினா். அப்போது, அவரது கணவா் ரமேஷ்வா் குப்தா இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அந்தப் பெண் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருவதும், கணவா் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததும் தெரியவந்தது.

சம்பவத்தன்று அப்பெண்ணின் வீட்டுக்கு போதையில் சென்ற ரமேஷ்வா் குப்தா, திராவகத்தை அவா் மீது வீசிவிட்டு தப்பியோடிவிட்டாா். இதையடுத்து, அவா் மீது உரிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சில தினங்களுக்குப் பிறகு ரமேஷ்வா் குப்தா கைது செய்யப்பட்டாா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவா் மீது திராவகம் வீசியதாக கூறினாா். இது தொடா்பான வழக்கு தில்லி நீதிமன்றத்தில்ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அண்மையில் தீா்ப்புக் கூறப்பட்டது.

அதில் குற்றம்சாட்டப்பட்டவரின் குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்ததாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com