சுடச்சுட

  

  குழந்தை கடத்தல்காரர்களாக நினைத்து மூவர் மீது தாக்குதல்: இருவர் கைது

  By DIN  |   Published on : 13th September 2019 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லி ஷஹீன் பாக் பகுதியில் குழந்தைக் கடத்தல்காரர்கள் என நினைத்து மூவரை கும்பல் தாக்கிய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
  இது குறித்து காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: தில்லியில் உள்ள அப்துல் ஃபாசல் என்கிளேவ் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்லாம், அபுஸார். மக்கள் கூடும் பகுதிகளிலும், சமுதாய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று டிரம் வாசித்து தீபக், ரஞ்சித், சிவக்குமார் ஆகியோர் வருவாய் ஈட்டி வந்தனர். 
  இந்நிலையில், விநாயகர் விசர்ஜனத்தை ஒட்டி, இவர்கள் மூவரும் கலிந்தி குஞ்ச் அருகே உள்ள யமுனா கேட் சென்றனர். அங்கு பக்தர்கள் முன்னிலையில் டிரம் வாசித்து பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி அங்கு பக்தர்கள் வரவில்லை. இதைத் தொடர்ந்து, மொஹரத்தையொட்டி, இவர்கள் அப்துல் ஃபைசல் என்கிளேவ் பகுதிக்குச் சென்றனர். 
  இவர்கள் அங்கு சென்றதும், அப்பகுதியைச் சேர்ந்த அஸ்லாம், அபுஸார் மற்றும் சிலர் தடுத்துள்ளனர். அப்போது மூவரையும் குழந்தைக் கடத்தல்காரர்கள் என நினைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் தீபக் , ரஞ்சித் , சிவக்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அஸ்லாம், அபுஸார் ஆகியோரைக் கைது செய்தனர். தீபக் அளித்த புகாரின் பேரில் ஷஹீன் பாக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைந நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai