Enable Javscript for better performance
சரிதா விஹாரில் தாய், மகளை கட்டிப்போட்டு கொள்ளையிட்ட வீட்டுப் பணிப் பெண் கைது: நகை, பணம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    சரிதா விஹாரில் தாய், மகளை கட்டிப்போட்டு கொள்ளையிட்ட வீட்டுப் பணிப் பெண் கைது: நகை, பணம் மீட்பு

    By DIN  |   Published on : 14th September 2019 03:08 AM  |   அ+அ அ-   |    |  

    சரிதா விஹாரில் 80 வயது மூதாட்டி, அவரது 44 வயது மகள் ஆகியோரை கட்டிப் போட்டு பணம், நகைகளைக் கொள்ளைடித்த சம்பவத்தில் வீட்டுப் பணிப் பெண்ணை தில்லி போலீஸார் கைது செய்தனர். 
    இதுகுறித்து தில்லி குற்றப் பிரிவு காவல் துணை ஆணையர் டாக்டர் ஜி.ராம் கோபால் நாயக் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
    செப்டம்பர் 3-ஆம் தேதி சரிதா விஹார் பகுதியைச் சேர்ந்த 44 வயது பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். அதில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வீட்டுப் பணிப்பெண்ணாக புவனேஸ்வரி என்பவரை வேலைக்குச் சேர்த்தேன். 
    செப்டம்பர் 1-ஆம் தேதி அவர் எனது வீட்டுக்கு ஒருவரை அழைத்து வந்தார். அவரை தனது சகோதரர் எனக் கூறினார். இந்நிலையில், செப்டம்பர் 2-ஆம் தேதி மதியம் வீட்டில் திடீரென சப்தம் கேட்டது. அப்போது, புவனேஸ்வரியுடன் இரு ஆண்கள் நின்று கொண்டிருந்தனர்.  அவர்களில் ஒருவர் முதல் நாள் வீட்டுக்கு வந்தவர் நபர் எனத் தெரிந்தது. பின்னர் மூவரும் சேர்ந்து என்னையும், எனது 80 வயது தாயையும் கட்டிப் போட்டுவிட்டு வீட்டிலிருந்து பொருள்களைக் கொள்ளையடித்தனர் என்று புகாரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிசாரணை நடத்தப்பட்டது.
    இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய புவனேஸ்வரி சராய் கலே கான் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.88 ஆயிரம் ரொக்கம், நகைகள், வாட்ச் உள்ளிட்டவை மீட்கப்பட்டன. நேபாள நாட்டைச் சேர்ந்த அப்பெண் தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
    மேலும், தாய், மகள் இருவருக்கும் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருவதாக காவல் உயர் அதிகாரி ராம் கோபால் நாயக் கூறினார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp