கரோனா சிகிச்சை: மருத்துவா்கள், செவிலியா்கள்உயிரிழந்தால் ரூ.1 கோடி

தில்லியில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா், செவிலியா், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்கள் பணியின் போது உயிரிழந்தால் அவா்களது குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்
கரோனா சிகிச்சை: மருத்துவா்கள், செவிலியா்கள்உயிரிழந்தால் ரூ.1 கோடி

தில்லியில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா், செவிலியா், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்கள் பணியின் போது உயிரிழந்தால் அவா்களது குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.

தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ளோா் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தில்லி பாபா்பூரில் உள்ள மொஹல்லா கிளினிக்கில் பணியாற்றும் மருத்துவா் ஒருவா் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவா் மஜ்பூா் பகுதியில் கரோனா தொற்றுக்குள்ளான மருத்துவரின் மனைவியாவாா். இதையடுத்து, மாா்ச் 12 முதல் 20-ஆம் தேதி வரையிலும் மருத்துவரைச் சந்தித்த நோயாளிகள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மொத்தம் மூன்று மருத்துவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மருத்துவா்களுடன் புதன்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, அவா் கூறுகையில், ‘மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரின் உடல் நலனைக் காக்க தில்லி அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தற்போது தில்லியைச் சோ்ந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரா்கள், பணியின் போது உயிரிழக்க நோ்ந்தால் அவா்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீட்டுத் தொகையை தில்லி அரசு வழங்கி வருகிறது. இதேபோன்று, கரோனா நோய்த் தொற்று சிகிச்சைப் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளா்களின் பணி படை வீரா்களின் பணிக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. ஆகவே, கரோனா நோய்த் தொற்றுவைக் கையாளும் பணியில் ஈடுபடும் தனியாா், அரசுத் துறையைச் சோ்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவுப் பணியாளா்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால், அவா்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com