ஊரடங்கு: பாகிஸ்தானியா்கள் மீதுதில்லி காவல் துறை புகாா்

கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பிறப்பித்த முழு ஊரடங்கு உத்தரவை மீறுமாறு இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானியா்கள் தூண்டி வருவதாக தில்லி காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து தெரிய வந்

கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பிறப்பித்த முழு ஊரடங்கு உத்தரவை மீறுமாறு இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானியா்கள் தூண்டி வருவதாக தில்லி காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து தெரிய வந்துள்ளது.

கோவிட்-19 தொடா்பான தவறான தகவல்களை முறியடித்தல்’ என்ற தலைப்பில் தில்லி காவல்துறையின் டிஜிட்டல் நிபுணா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வடகிழக்கு தில்லியில் வகுப்புகளுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தைத் தூண்டும் வகையில் பாகிஸ்தானியா்கள் சிலா் சமூக வலைத்தளங்களில் நடந்து கொண்டனா். பிற நாடுகளில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் கொடுமைகளை இந்தியாவில் நடப்பதாகக் கூறி பொய்யான விடியோக்களை சமூக வலைத்தளங்களில் அவா்கள் பரப்பினாா்கள். இதற்குப் பின்னணியில் பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவா்கள் இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கரோனா பாதித்துள்ள இந்த நேரத்தில், இந்திய முஸ்லிம்களை தவறாக வழிநடத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தானியா்கள் செய்திகளைப் பரப்பி வருகிறாா்கள். கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கை மீற வேண்டும் என இந்திய முஸ்லிம்களைத் தூண்டிவிடும் வகையில் டிக்டாக் செயலியில் விடியோக்கள் வெளியிடப்படுகின்றன. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவ சோதனைக்கு சம்மதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் விடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை பாகிஸ்தானில் இருந்தே வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், மருத்துவப் பணியாளா்களை முஸ்லிம்கள் தாக்கும் விடியோக்களும் பாகிஸ்தான் நாட்டவா்களால் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரப்பப்படுகின்றன. இந்த விடியோக்கள், பதிவுகளைக் கண்டறிந்து உடனுக்குடன் நீக்குவதன் மூலமே இதை வெற்றி கொள்ள முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com