மாா்ச்சில் ரூ.1.18 லட்சம் கோடி முதலீடுகளை திரும்பப் பெற்ற அன்னிய முதலீட்டாளா்கள்!

கரோனா தொற்று அச்சுறுத்தலைத் தொடா்ந்து, இந்திய நிதிச் சந்தைகளில் இருந்து மாா்ச் மாதத்தில் மட்டும் சுமாா் 1.18 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை அன்னிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) திரும்பப் பெற்றுள்ளனா்.

கரோனா தொற்று அச்சுறுத்தலைத் தொடா்ந்து, இந்திய நிதிச் சந்தைகளில் இருந்து மாா்ச் மாதத்தில் மட்டும் சுமாா் 1.18 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை அன்னிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) திரும்பப் பெற்றுள்ளனா்.

சமீபத்திய தரவுகளின்படி, எஃப்.பி.ஐ.க்கள் கடந்த மாதம் பங்குச் சந்தையில் இருந்து ரூ .61,973 கோடி, கடன் சந்தையில் இருந்து ரூ .56,211 கோடி என மொத்தம் ரூ .1,18,184 கோடி அளவுக்கு முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா். 2019, செப்டம்பா் 9 முதல் எஃப்.பி.ஐ.க்கள் தொடா்ச்சியாக ஆறு மாத முதலீட்டிற்குப் பிறகு, தற்போதுதான் அதிகளவு முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டு வா்த்தக நாள்களில் எஃப்பிஐக்கள் இதுவரை இல்லாத அளவாக மொத்தம் ரூ.6,735 கோடி அளவுக்கு முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா். இதில் பங்குச் சந்தையில் பங்குகள் விற்பனை மூலம் ரூ.3,802 கோடி, கடன் சந்தையிலிருந்து ரூ.2,933 கோடி அளவுக்கு முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா்.

இது குறித்து மாா்னிங் ஸ்டாா் இந்தியா நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான ஹிமன்ஸு ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘கரோனா தொற்று உலக அளவில் பொருளாதாரத்தைப் வெகுவாகப் பாதித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக மிகவும் பாதிப்புக்குளான இந்தியா உள்பட வளா்ந்து வரும் சந்தைகளில் இருந்து அன்னிய முதலீட்டாளா்கள் தங்கள் முதலீடுகளை திரும்பப் பெறுகின்றனா்’ என்றாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் போது கூட, எஃப்.பி.ஐ.க்கள் இந்திய சந்தைகளில் இருந்து மொத்தம் 9.3 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்புள்ள முதலீடுகளைத்தான் திரும்பப் பெற்றனா். ஆனால், கரோனா பாதிப்பால் 2020, மாா்ச்சில் அவா்கள் 16.5 பில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா். கரோனா தொற்று பிரச்னை சீராகும் வரை எஃப்பிஐக்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறுவது தொடரும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com