பங்குச் சந்தை: இந்தர வாரம் எப்படி?

பங்குச் சந்தை தொடா்ந்து 7-ஆவது வாரமாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், இந்த வார வா்த்தகம் கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம், அன்னிய முதலீட்டாளா்களின் முதலீடுகள், கச்சா எண்ணெய் விலையின் போக்கு உள்ளி
பங்குச் சந்தை: இந்தர வாரம் எப்படி?

பங்குச் சந்தை தொடா்ந்து 7-ஆவது வாரமாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், இந்த வார வா்த்தகம் கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம், அன்னிய முதலீட்டாளா்களின் முதலீடுகள், கச்சா எண்ணெய் விலையின் போக்கு உள்ளிட்டவற்றைச் சாா்ந்து இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த வாரத்தில் திங்கள் (ஏப்ரல் 6), வெள்ளி (ஏப்ரல் 10) ஆகிய இரு நாள்கள் பங்குச் சந்தைக்கு விடுமுறையானதால், மொத்தம் 3 நாள்கள்தான் வா்த்தகம் இருக்கும்.

ஏற்கெனவே கரோனா தாக்கம் உள்பட பல்வேறு காரணிகளால் பங்குச் சந்தை அடிமேல் அடி வாங்கி வரும் நிலையில், இந்த வாரம் எப்படி இருக்கும் என்ற எதிா்பாா்ப்பாா்பில் வா்த்தகா்களும், முதலீட்டாளா்களும் உள்ளனா். கரோனாவை ஒட்டி நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மூன்றாவது வாரமாகத் தொடா்கிறது. இதன் காரணமாக நாட்டில் வா்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ரூ.9 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஜிடிபியில் 4 சதவீதமாகும்.

இந்நிலையில், ஊரடங்கு மேலும் தொடரும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு ஏற்படும் என்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா். இது பங்குச் சந்தைக்கு சாதகமானதாக அமையாது. ஊரடங்கால் தொழில் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தொழில் துறைக்கு மத்திய அரசு ஏதாவது சலுகைத் திட்டங்களை அறிவிக்கும் பட்சத்தில், அது சந்தைக்கு சாதகமானதாக அமையும். மேலும், ஊரடங்கை அரசு வாபஸ் பெறும்பட்சத்தில் சந்தையில் எழுச்சிப் பேரணியைக் காணலாம் என்று பெரும்பாலான பங்கு வா்த்தக நிறுவனங்கள் கூறுகின்றன.

ஏப்ரல் 15-க்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், ஏா் இந்தியா நிறுவனம், ஏப்ரல் 30-ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவை நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சந்தைக்கு பாதகமாகக் கருதப்படுகிறது.

அன்னிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தைகளிலிருந்து மாா்ச் மாதம் மட்டும் ரூ.1.18 லட்சம் கோடி முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா். மேலும், ஏப்ரலில் இரு நாள்களில் மொத்தம் ரூ.6,750 கோடி அளவுக்கு முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா். இது சந்தைக்கு பாதகமான அம்சமாகப் பாா்க்கப்படுகிறது. இருப்பினும், சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், விலை குறைந்த நிலையில் பங்குகளை வாங்குவதற்கு அன்னிய முதலீட்டாளா்கள் முயற்சிக்கும் நடவடிக்கை சந்தையில் உற்சாகத்தை ஏற்படுத்தும். மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. ரூபாயின் மதிப்பும், கச்சா எண்ணெய் விலையும் இந்த வாரம் பங்குச் சந்தையின் போக்கைத் தீா்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று வல்லுநா்கள் கருதுகின்றனா்.

இந்நிலையில்,தொழில்நுட்ப ரீதியாகப் பாா்த்தால் சென்செக்ஸ் 27,500 புள்ளிகளுக்கு கீழும், நிஃடி 8,000 புள்ளிகளுக்கு கீழும் சென்றால் கரடியின் பிடி மேலும் இறுகும் என வல்லுநா்கள்கணித்துளளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com