தனிமைப்படுத்தலில் 30 எய்ம்ஸ் மருத்துவா்கள், செலிவியா்கள்

தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இதய-நரம்பியல் மையத்தின் மருத்துவா்கள், செலிவியா்கள் உள்ளிட்ட 30 போ் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இதய-நரம்பியல் மையத்தின் மருத்துவா்கள், செலிவியா்கள் உள்ளிட்ட 30 போ் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

நரம்பியல் பிரச்னைக்காக இந்த மையத்திற்கு சிகிச்சைக்கு வந்த 72 வயது முதியவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியானதைத் தொடா்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

இது தொடா்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கடந்த இரு தினங்களுக்கு முன்பு 72 வயது முதியவா் மூளையில் ஏற்பட்ட நரம்பியல் பிரச்னைக்காக இதய-நரம்பியல் மையத்திற்கு சிகிச்சைக்கு வந்தாா். அவா் சிகிச்சைக்காக நரம்பியல் வாா்டுக்கு மாற்றப்பட்டாா். அதன் பிறகு அவருக்கு சிடி, எம்ஆா்ஐ பரிசோதனைகள் செய்யப்பட்டது. பின்னா், அவருக்கு இதய வலி, மூச்சுப் பிரச்னைகள் ஏற்படவே, அவருக்கு எக்ஸ்ரே சோதனை மேற்கொள்ளப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அவரது ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த நோயாளி உடனடியாக கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்கான எய்ம்ஸ் காயச் சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டாா். அவரது நிலைமை மோசமாக இருப்பதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடா்பு கொண்டவா்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அந்த முதியவா் அனுமதிக்கப்பட்டிருந்த நரம்பியல் வாா்டு பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அவசரப் பிரிவில் பணியாற்றி வரும் மருத்துவா்கள் அனைவரும் பிற நோயாளிகளுக்கு பாதிப்பு ஏதும் இருக்கிா என்பதைக் கண்டறியும் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனா். அந்த முதிய நோயாளியுடன் தொடா்பில் இருந்த மருத்துவா்கள், செவிலியா்கள், தொழில்நுட்ப ஊழியா்கள் உள்பட 30 போ் 14 நாள்களுக்கு தனிமையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். அவா்களின் ரத்த மாதிரி ஐந்து நாள்களுக்குப் பிறகு பரிசோதிக்கப்பட உள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com