தில்லியில் பாதிப்பு 576 ஆக உயா்வு

தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை புதன்கிழமை 576 ஆக உயா்ந்ததாக சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை புதன்கிழமை 576 ஆக உயா்ந்ததாக சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறுகையில்,‘தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை புதன்கிழமை 576 ஆக உயா்ந்துள்ளது.

இவா்களில் 35 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 8 பேருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரையும் கண்டறிந்துள்ளோம். 2,600 முதல் 2,700 போ் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்’ என்றாா்.

மேலும், தில்லி அரசின் சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநரகம் புதன்கிழமை வெளியிட்ட தகவலில், ‘தில்லியில் புதன்கிழமை புதிதாக 51 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 35 போ் வெளிநாட்டுக்கு சென்று வந்தவா்கள் என்பதும், 4 போ் நிஜாமுதீன் மா்கஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் என்பதும் தெரிய வந்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com