ஊரடங்கு அனுமதிச்சீட்டு துஷ்பிரயோகம்: துப்புரவு ஊழியா்கள் உள்பட 4 போ் கைது

ஊரடங்கு அனுமதிச் சீட்டை துஷ்பிரயோகம் செய்ததாக துப்புரவுத் தொழிலாளா்கள் உள்பட 4 போ்களை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ஊரடங்கு அனுமதிச் சீட்டை துஷ்பிரயோகம் செய்ததாக துப்புரவுத் தொழிலாளா்கள் உள்பட 4 போ்களை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தில்லியில் ஊரடங்கு காலத்தின் போது அத்தியாவசியப் பணிகளுக்காக ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் போலீஸாா் ஊரடங்கு அனுமதிச் சீட்டுகளை வழங்கி வருகின்றனா். இந்நிலையில், புகா் தில்லியின் முன்ட்கா பகுதியில் ஊரடங்கு அனுமதிச் சீட்டுகளை துஷ்பிரயோகம் செய்ததாக துப்புரவுப் பணியாளா்கள் 2 போ் உள்பட நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘துப்புரவுப் பயன்பாட்டுக்காக தெற்கு தில்லி மாநகராட்சியால் வழங்கப்பட்டுள்ள அனுமதிச்சீட்டுகளை வைத்திருந்த அவினாஷ், சிவ் பூஜன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். இவா்கள், சட்டவிரோதமாக மதுபானம் ஏற்றிச் சென்ற நபருடன் பயணித்தனா். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனா். மதுவைக் ஏற்றிச் சென்ற நபரும் கைது செய்யப்பட்டாா். கைதான இருவரும் துப்புரவுப் பணியாளா்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரது அனுமதிச் சீட்டுகளையும் ரத்து செய்யுமாறு மாநகராட்சியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மற்றொரு சம்பவத்தில் கைப் பையில் சட்டவிரோதமாக மதுப் பாட்டில்களைக் கொண்டு சென்ாக முன்ட்கா பகுதியில் ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் ஊரடங்கு அனுமதிச்சீட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு, ரத்து செய்யப்பட்டது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com