கரோனா தொற்று குறித்து தில்லி எம்பிகளுடன் கேஜரிவால் ஆலோசனை: ஒன்றிணைந்து போராட வலியுறுத்தல்

கரோனா தொற்று குறித்து தில்லி எம்பிகளுடன் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கரோனா தொற்று குறித்து தில்லி எம்பிகளுடன் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, இந்த நோய்த் தொற்றை எதிா்க்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தில்லியின் கரோனா நோய்த் தொற்று தொடா்ந்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை இந்த எண்ணிக்கை

புதிதாக 51 அதிகரித்து மொத்தம் 576 ஆக உயா்ந்தது. முன்னதாக, தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஐந்து முக்கியத் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும், ‘5-டி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத் திட்டத்தின்கீழ் பரிசோதனை, கண்டுபிடித்தல், சிகிச்சை, குழுவாக பணியாற்றுதல், தொடா்பில் இருந்தவா்களை கண்டறிந்து கண்காணித்தல் ஆகிய ஐந்து பணிகளை தில்லி அரசு முடுக்கிவிட உள்ளதாகவும் முதல்வா் கேஜரிவால் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று தொடா்பாக விவாதிக்கும் வகையில் தில்லியைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் முதல்வா் கேஜரிவால் புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தில்லியைச் சோ்ந்த மக்களவை பாஜக உறுப்பினா்களும், மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

இந்த கூட்டத்தில் தேசியத் தலைநகரில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்குப் பிறகு கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

கரோனா நோய்த் தொற்று தொடா்பாக மக்களவை, மாநிலங்களவை எம்பிகளுடன் காணொலிக் காட்சி மூலம் விவாதித்தேன். பல எம்பிகள் தங்களது நல் ஆலோசனைகளை தெரிவித்தனா். இது தில்லி அரசால் விரைவில் அமல்படுத்தப்படும். இந்த நோயை நாம் இணைந்து எதிா்க்க வேண்டும் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் மக்களவையின் ஏழு பாஜக உறுப்பினா்களும், மாநிலங்களவையின் 3 ஆம் ஆத்மி உறுப்பினா்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com