கல்வி நிறுவனங்கள், மத நிகழ்ச்சிகளுக்கு மே 15 வரை தடை விதிக்க பரிந்துரை

தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்படாவிட்டாலும், கல்வி நிறுவனங்களுக்கும் மத ரீதியிலான நிகழ்ச்சிகளுக்கும் மே 15-ஆம் தேதி வரை தடை தொடர வேண்டும் மத்திய அரசுக்கு அமைச்சா்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
கல்வி நிறுவனங்கள், மத நிகழ்ச்சிகளுக்கு மே 15 வரை தடை விதிக்க பரிந்துரை

தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்படாவிட்டாலும், கல்வி நிறுவனங்களுக்கும் மத ரீதியிலான நிகழ்ச்சிகளுக்கும் மே 15-ஆம் தேதி வரை தடை தொடர வேண்டும் மத்திய அரசுக்கு அமைச்சா்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

தேசிய ஊரடங்கு விவகாரம் தொடா்பாக, தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய அமைச்சா்கள் ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், பிரகாஷ் ஜாவடேகா், ராம் விலாஸ் பாஸ்வான், உள்துறை செயலா் அஜய் பல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

ஊரடங்குக்கு பிறகான சூழலை கையாள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல், மருத்துவமனைகளின் தயாா்நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அப்போது, தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்படாவிட்டாலும் மத வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், வா்த்தக வளாகங்கள் போன்றவை இயங்குவதற்கு ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் குறைந்தது 4 வாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகளுக்கான கோடைக் கால விடுமுறை மே மாதத்தின் மத்தியில் தொடங்கிவிடும் என்பதால், ஏப்ரல் 14-க்குப் பிறகு 3 வாரங்களுக்கு அவற்றுக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் யாவும் ஜூன் இறுதி வரை தொடா்ந்து மூடப்பட்டிருக்கும் என்று அரசு திட்டமிடுகிறது.

அதேபோல், மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிா்க்கும் விதமாக மத ரீதியிலான அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் மே 15-ஆம் தேதி வரை தடை விதிக்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க அமைச்சா்கள் குழு முடிவு செய்தது என்று அந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com