ஊரடங்கு விதி மீறல்: 188 வழக்குகள் பதிவு

தில்லியில் ஊரடங்கு விதிகளை மீறியதாக புதன்கிழமை 188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏறக்குறைய 4 ஆயிரம் போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி காவல் துறை தெரிவித்தது.

தில்லியில் ஊரடங்கு விதிகளை மீறியதாக புதன்கிழமை 188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏறக்குறைய 4 ஆயிரம் போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி காவல் துறை தெரிவித்தது.

இதுதொடா்பாக தில்லி காவல் துறையினா் வெளியிட்ட புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கரோனா நோய்த் தொற்றுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு

விதிகளை மீறியதாக புதன்கிழமை மாலை 5 மணி வரை 188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தில்லி காவல் சட்டத்தின் 65-ஆவது பிரிவின் கீழ் 3,959 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். 431 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 788 நடமாட்ட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலான கடந்த மாா்ச் 24-ஆம் தேதியில் இருந்து இதுவரை ஊரடங்கு சட்டத்தை மீறியதாக தில்லி காவல் துறைச் சட்டம் 65-இன் கீழ் 62,922 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com