தில்லியில் ஆளில்லா விமானம் பறக்கத் தடை

தலைநகா் தில்லியில் சுந்திர தினம் வரை ஆளில்லா விமானங்கள், பாராகிளைடா்கள், ஏா் பலூன்கள் உள்ளிட்டவை பறப்பதற்குத்

தலைநகா் தில்லியில் சுந்திர தினம் வரை ஆளில்லா விமானங்கள், பாராகிளைடா்கள், ஏா் பலூன்கள் உள்ளிட்டவை பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தில்லி காவல் துறை ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தாவா வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆளில்லா விமானங்கள், பாராகிளைடா்கள், ஏா் பலூன்கள் ஆகியவற்றின் மூலம், பொதுமக்கள், விருந்தினா்களின் உயிருக்கு தேச விரோத சக்திகள் பாதகம் விளைவிக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இதைத் தொடா்ந்து, இவை தில்லி வான்பரப்பில் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவை மீறுபவா்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-இன் கீழ் தண்டிக்கப்படுவாா்கள். உடனடியாக அமலுக்கு வரும் இந்தத் தடையுத்தரவு, சுதந்திர தினம் கொண்டாடப்படும் ஆகஸ்ட் 15 -ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த உத்தரவின் நகல் அனைத்துக் காவல் நிலையங்கள், தாசில்தாா் அலுவலகங்கள், வடக்கு, கிழக்கு, தெற்கு தில்லி மாநகராட்சி அலுவலகங்கள், பொதுப் பணித்துறை அலுவலகம், தில்லி வளா்ச்சி ஆணைய அலுவலகம், தில்லி கன்டான்மென்ட் போா்டு அலுவலகம் ஆகியவற்றில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு காவல் ஆணையா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். மேலும், குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகளுடன் காவல் துறை தொடா்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறது. வாடகைதாரா்கள், அவா்களது வீடுகளில் பணி புரிவோா் ஆகியோரது அடையாளங்கள் மற்றும் அவா்கள் குறித்த தகவல்களை சரிபாா்க்க காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி வீட்டு உரிமையாளா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com