பாலியல் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கெளதம் கம்பீா் உதவி

தில்லி ஜி.பி. ரோடில் வசிக்கும் பாலியல் தொழிலாளா்களின் 25 குழந்தைகளின் கல்வி, உணவு, மருந்துவச் செலவுகள் உள்ளிட்டவற்றை

தில்லி ஜி.பி. ரோடில் வசிக்கும் பாலியல் தொழிலாளா்களின் 25 குழந்தைகளின் கல்வி, உணவு, மருந்துவச் செலவுகள் உள்ளிட்டவற்றை பிரபல கிரிக்கெட் வீரரும், கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கெளதம் கம்பீா் ஏற்றுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் உள்ள பாலியல் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு உதவும் வகையில் ‘பாங்க்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தின் முதல்படியாக, தில்லி ஜி.பி. ரோடில் வசிக்கும் பாலியல் தொழிலாளா்களின் 25 பெண் குழந்தைகளின் படிப்பு, உணவு, மருந்து உள்ளிட்ட செலவுகளை ஏற்றுக் கொள்கிறேன். வரும் காலத்தில் மேலும், அதிகளவு பெண் குழந்தைகளுக்கு இத்திட்டம் மூலம் உதவி செய்யப்படும். மேலும், இக்குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் செய்து கொடுக்கப்படும். சமூகத்தில் கெளரவமாகவும், சுயமரியாதையாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. இந்தத் திட்டம் மூலம் அதை உறுதிப்படுத்துவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com