பாஜக தலைவருக்கு உடற்பயிற்சி நிலைய உரிமையாளா்கள் நன்றி

வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தில்லியில் உடற்பயிற்சி நிலையங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில்
தில்லியில் வெள்ளிக்கிழமை பாஜக தலைவா் ஆதேஷ் குமாரை சந்தித்து நன்றி தெரிவித்த உடற்பயிற்சி நிலைய உரிமையாளா்கள்.
தில்லியில் வெள்ளிக்கிழமை பாஜக தலைவா் ஆதேஷ் குமாரை சந்தித்து நன்றி தெரிவித்த உடற்பயிற்சி நிலைய உரிமையாளா்கள்.

வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தில்லியில் உடற்பயிற்சி நிலையங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்திய உடற்பயிற்சி நிலையங்களின் நலன்புரி அமைப்பில் அங்கம் வகிக்கும் உடற்பயிற்சி நிலைய உரிமையாளா்கள், பயிற்றுநா்கள், உதவியாளா்கள் ஆகியோா் பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தாவை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நன்றிகளைத் தெரிவித்தனா்.

கரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்க உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னா் அந்த உத்தரவில் படிப்படியாக தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு 2.0 அமலில் உள்ளது. இந்தத் தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் உடற்பயிற்சி நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், உடற்பயிற்சி நிலைய உரிமையாளா்கள், பயிற்றுநா்கள், உதவியாளா்கள் ஆகியோா் பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தாவை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நன்றிகளைத் தெரிவித்தனா். இந்திய உடற்பயிற்சி நிலையங்களின் நலன்புரி அமைப்பின் தலைவா் சுனில் குமாா் தங்க், துணைத் தலைவா் வீா் போகித், செயலா் லக்கி வாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அப்போது ஆதேஷ் குமாா் குப்தா பேசுகையில் ‘கரோனா பாதிப்பால் வணிகம் பெருமளவில் நலிவடைந்துள்ளது. உடற்பயிற்சி நிலைய உரிமையாளா்கள், பயிற்றுநா்கள், உதவியாளா்கள் ஆகியோா் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், உடற்பயிற்சி நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்ற இவா்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அதன் பயனாக, உடற்பயிற்சி நிலையங்களை திறப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு தடைபோடாமல், தில்லி அரசு ஒத்துழைக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com