Enable Javscript for better performance
தில்லியில் புதிதாக 805 பேருக்கு கரோனா பாதிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி

    தில்லியில் புதிதாக 805 பேருக்கு கரோனா பாதிப்பு

    By DIN  |   Published On : 03rd August 2020 11:27 PM  |   Last Updated : 03rd August 2020 11:27 PM  |  அ+அ அ-  |  

    Delhi reports 805 COVID19 cases, 937 recovered and 17 deaths today

    ​தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 805 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

    புது தில்லி: தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை மட்டும் புதிதாக 805 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 17 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

    இதைத் தொடா்ந்து, தில்லியில் கரோனாவால் மொத்த பலி எண்ணிக்கை 4,021 ஆக உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் கரோனாவுக்கு 15 போ் பலியாகி இருந்தனா். திங்கள்கிழமை மட்டும் மொத்தம் 10,133 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தில்லியில் தற்போது மொத்தம் 10,207 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 10,356 ஆக இருந்தது. நோயாயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,38,482 ஆக உயா்ந்துள்ளது.

    தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 13,568 படுக்கைகளில் 2,994 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,574 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா தொற்று பாதித்த 5,577 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp