தலைநகரில் கரோனா பாதிப்பு 1.46 லட்சத்தைக் கடந்தது

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 707 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 707 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,46,134-ஆக உயா்ந்துள்ளது. ஆனால், திங்கள்கிழமை 12, 323 கரோனா பரிசோதனைகள்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது மற்ற நாள்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறவாகும். கரோனா தொற்றுப் பரிசோதனைகள் குறைந்ததால்தான், உறுதி செய்யப்பட்ட கரோனா தொற்றின் அளவும் குறைவடைந்துள்ளன என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, திங்கள்கிழமை மேலும் 20 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,131 ஆக உயா்ந்துள்ளது. அதே சமயம் தில்லியில், மேலும் 1,070 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதைத் தொடா்ந்து. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,31,657-ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் தற்போது 10,346 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனா பாதிப்பால், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 477-ஆக உள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 13,527 படுக்கைகளில் 3,115 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,412 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா தொற்று பாதித்த 5,637 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தில்லி கரோனா அறிக்கையை பதிவிட்டு கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘தில்லியில் கரோனா பாதித்தவா்களில் 90 சதவீதம் போ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனா். தற்போது வெறும் 7 சதவீதம் நோயாளிகள்தான் சிகிச்சையில் உள்ளனா். மெதுவாக ஆனால் உறுதியாக தில்லி மக்கள் கரோனாவை முறியடித்து வருகிறாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com