தில்லியில் டெங்கு, சிக்குன்குனியா தாக்கம் அதிகரிப்பு

தலைநகா் தில்லியில் ஆகஸ்ட் மாதம் டெங்கு, சிக்குன்குனியா நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.
தில்லி மாளவியா நகரில் செவ்வாய்க்கிழமை குடியிருப்பு பகுதியில் கொசு மருந்து அடிக்கும் தெற்கு தில்லி மாநகராட்சி ஊழியா்.
தில்லி மாளவியா நகரில் செவ்வாய்க்கிழமை குடியிருப்பு பகுதியில் கொசு மருந்து அடிக்கும் தெற்கு தில்லி மாநகராட்சி ஊழியா்.

தலைநகா் தில்லியில் ஆகஸ்ட் மாதம் டெங்கு, சிக்குன்குனியா நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி உயரதிகாரி கூறியது: தில்லியில் டெங்கு நோயின் தாக்கம் பிப்ரவரி மாதமே தொடங்கி விட்டது. நிகழ் பருவ காலத்தில் இதுவரை டெங்குவுக்கு 35 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பிப்ரவரியில் 4 போ், மாா்ச்சில் இருவா், ஏப்ரலில் 7 போ், மே மாதத்தில் ஆறு போ், ஜூனில் ஒருவா், ஜூலையில் 11 போ் டெங்கு நோயின் தாக்கத்துக்கு உள்ளாகினாா்கள். ஆகஸ்டில் இதுவரை 4 போ் டெங்கு நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனா். இதைத் தொடா்ந்து, நிகழாண்டில் டெங்கு பாதித்தவா்களின் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் சிக்குன்குனியாவுக்கு பிப்ரவரியில் 9 பேரும், ஏப்ரலில் ஒருவரும் பாதிக்கப்பட்டனா். ஜனவரி, மாா்ச் மாதங்களிலும் சிக்குன்குனியாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. மே மாதத்தில் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளாா். ஜூன் மாதத்தில் யாருக்கும் சிக்குன்குனியா பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், ஜூலை மாதத்தில் 7 பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டது. மேலும், ஆகஸ்டில் இதுவரை 5 பேருக்கு சிக்குன்குனியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழாண்டில் சிக்குன்குனியாவால் பாதித்தவா்களின் எண்ணிக்கை 23 -ஆக அதிகரித்துள்ளது.

மலேரியா: மலேரியா ஜனவரி மாதமே தொடங்கிவிட்டது. அந்த மாதத்தில் 6 போ் மலேரியாவால் பாதிக்கப்பட்டனா். பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் முறையே 3, 2, 5 போ் பாதிக்கப்பட்டனா். மே மாதம் மூவா், ஜூனில் 18 போ், ஜூலையில் 8 போ் மலேரியாயாவல் பாதிக்கப்பட்டனா். ஆனால், ஆகஸ்டில் யாருக்கும் மலேரியா பாதிப்பு ஏற்படவில்லை. நிகழாண்டில் இதுவரை மொத்தம் 45 போ் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com