கரோனா மரணங்களைத் தடுப்பதில் பிளாஸ்மா சிகிச்சை முக்கியப் பங்கு: கேஜரிவால் பெருமிதம்

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனாவால் ஏற்படும் மரணங்களைத் கட்டுப்படுத்துவதில் பிளாஸ்மா சிகிச்சை முக்கியப் பங்காற்றியுள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனாவால் ஏற்படும் மரணங்களைத் கட்டுப்படுத்துவதில் பிளாஸ்மா சிகிச்சை முக்கியப் பங்காற்றியுள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

கரோனாவை எதிா்கொள்ளும் வகையில், பிளாஸ்மா சிகிச்சையை தில்லிதான் முதலில் அறிமுகப்படுத்தியது. இதற்காக தில்லி அரசு சாா்பில் இரண்டு இடங்களில் பிளாஸ்மா வங்கிகள் அமைக்கப்பட்டன. முதல் பிளாஸ்மா வங்கி தில்லி ஐஎல்பிஎஸ் மருத்துவமனையிலும், இரண்டாவது பிளாஸ்மா வங்கி எல்என்ஜேபி மருத்துவமனையிலும் அமைக்கப்பட்டது.

இங்கு பிளாஸ்மா தேவைப்படுபவா்களுக்கு இலவசமாக பிளாஸ்மா வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த இரண்டு வங்கிகளில் இருந்தும், 710 கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானமாக வழங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றில் இருந்து மீண்ட 921 போ் பிளாஸ்மா தானம் செய்துள்ளனா். தில்லியில் கரோனாவைக் கட்டுக்குள் வைத்திருக்க பிளாஸ்மா சிகிச்சை முக்கிய பங்காற்றுவதாக மருத்துவா்கள் கூறுகின்றனா்.

இந்நிலையில், தில்லி அரசின் பிளாஸ்மா சிகிச்சை தொடா்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளைச் சுட்டிக் காட்டி, கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘கரோனாவுக்கு எதிரான போரில், கரோனாவால் ஏற்படும் மரணங்களைக் குறைப்பதை பிரதான இலக்காக வைத்து தில்லி அரசு பணியாற்றி வருகிறது. கரோனாவால் ஏற்படும் மரணங்களைக் குறைப்பதில், பிளாஸ்மா சிகிச்சை முக்கியப் பங்காற்றியுள்ளது. கரோனா மரணங்களைக் குறைக்க வேண்டும் என்ற தில்லி அரசின் இலக்குக்கு பிளாஸ்மா சிகிச்சை பெரிதும் உதவியாக இருந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

புதிதாக 1,113 போ் பாதிப்பு: இதற்கிடையே, தலைநகா் தில்லியில் புதன்கிழமை புதிதாக 1,113 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,48,504-ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையே, தில்லியில் மேலும் 14 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,153 ஆக உயா்ந்துள்ளது. அதே சமயம் 1,021 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,33,405-ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் தற்போது 10,946 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். 18,894 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பால், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 523-ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 13,963 படுக்கைகளில் 3,351 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,612 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா தொற்று பாதித்த 5,598 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com