ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான போராட்டம்: தில்லி பாஜக எழுதிய கடிதத்திற்கு அண்ணா ஹசாரே பதில்

ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்ளுமாறு தில்லி பாஜக எனக்கு அழைப்பு விடுத்திருப்பது துரதிஷ்டவசமானது என்று பிரபல சமூக செயற்பாட்டாளா் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்ளுமாறு தில்லி பாஜக எனக்கு அழைப்பு விடுத்திருப்பது துரதிஷ்டவசமானது என்று பிரபல சமூக செயற்பாட்டாளா் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளாா்.

முதல்வா் கேஜரிவால் அரசின் ஊழலை எதிா்த்து தில்லி பாஜக நடத்திவரும் போராட்டங்களில் இணைந்து கொள்ளுமாறு பிரபல சமூக சேவகா் அண்ணா ஹசாரேவுக்கு பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா திங்கள்கிழமை கடிதம் எழுதினாா்.

இந்தக் கடிதத்துக்கு அண்ணா ஹாசரே வெள்ளிக்கிழமை பதில் அளித்துள்ளாா். அதில் தெரிவித்திருப்பதாவது:

உங்களின் (ஆதேஷ் குமாா் குப்தா) பாஜகதான் கடந்த ஆறு ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்கிறது.

உங்கள் கட்சியில்தான் அதிகளவில் இளைஞா்கள் உள்ளனா் எனக் கூறப்படுகிறது. 83 வயதான 12 அடி அறையில் வசிக்கும், பணமோ, சொத்தோ இல்லாத சாதுவான என்னை தில்லிக்கு வந்து போராடுமாறு அழைப்பது துரதிஷ்டவசமானது.

தில்லி காவல்துறை உள்ளிட்ட தில்லி அரசின் பல துறைகள் மத்திய அரசின் வசம்தான் உள்ளன. ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதமா் அடிக்கடி கூறி வருகிறாா். தில்லி அரசு ஊழலில் ஈடுபட்டிருந்தால், தில்லி அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாட்டில் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அரசு கூறுவது பொய்யா? என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com