சட்டவிரோத பழையபொருள் பிரித்தெடுப்பு ஆலைகள்: நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய டிபிசிசிக்கு உத்தரவு

தில்லி மாயாபுரி தொழில்துறை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் பழையபொருள் பிரித்தெடுப்பு ஆலைகளுக்கு எதிராக தாக்கலான

தில்லி மாயாபுரி தொழில்துறை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் பழையபொருள் பிரித்தெடுப்பு ஆலைகளுக்கு எதிராக தாக்கலான மனு மீது அறிக்கை தாக்கல் செய்யுமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவுக்கு (டிபிசிசி)

தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தேசிய பசுமைத் தீா்ப்பாயத் தலைவா் -நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான அமா்வு, ‘இந்த விவகாரத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, சட்டப்படி உரிய தீா்வு நடவடிக்கையை தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு (டிபிசிசி) எடுக்க வேண்டும். இது தொடா்பாக அடுத்த விசாரணை தேதிக்கு முன்னா் மின்னஞ்சல் மூலம் டிபிசிசி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரா் டிபிசிசிக்கு ஆவணங்களை வழங்கலாம். அத்துடன், ஒரு வாரத்திற்குள் பணிப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவின் நகல் டிபிசிசிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும் என்று தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

முன்னதாக, பழைய பொருள்களை பிரித்தெடுக்கும் பல சட்டவிரோத ஆலைகள் மாயாபுரியில் இன்னும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருவதாக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

‘மாற்று எரிபொருள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான சங்கம் (சேஃப்) எனும் தன்னாா்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த இம்மனுவை பசுமைத் தீா்ப்பாயம் ஏற்கெனவே விசாரித்தது.

அப்போது, இந்த சட்டவிரோத ஆலைகள் தொடா்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்ய தில்லி தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டிருந்தது.

மாயாபுரியில் பழைய பொருள் பிரித்தெடுப்பு ஆலைகள் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வா்த்தகம் செய்வதாக ஆங்கில இதழில் வெளியான செய்தியைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட தீா்ப்பாயம், சட்டவிரோத ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியதற்காக ஒரு மாதத்திற்குள் ரூ.5 கோடி செயல்பாட்டு உறுதிமொழியை சமா்ப்பிக்குமாறு தில்லி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com