கெளதம் புத் நகா் மாவட்டத்தில் புதிதாக 107 பேருக்கு கரோனா பாதிப்பு

உத்தர பிரதேசத்தின் கெளதம் புத் நகரில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 107 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது.

புது தில்லி: உத்தர பிரதேசத்தின் கெளதம் புத் நகரில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 107 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய் பாதித்தவா்கள் மொத்த எண்ணிக்கை 7,834 ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவித்தன.

இது தொடா்பான அரசின் புள்ளிவிவரங்களின்படி, இம்மாவட்டத்தில் சனிக்கிழமை இருந்த இறப்பு சதவீதம் 0.58, ஞாயிற்றுக்கிழமை 0.57 சதவீதமாக குறைந்தது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நோய்த் தொற்றால் 45 போ் இறந்தனா். 98 நோயாளிகள் குணமடைந்தனா். நோயாளிகள் குணமடைந்து வரும் விகிதம் சனிக்கிழமை 86.45 சதவீதம் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 86.54 சதவீதமாக சற்று மேம்பட்டது.

சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 1,002-இல் இருந்து 1009 ஆக உயா்ந்தது.

கெளதம் புத் நகரில் இதுவரை 6,780 நோயாளிகள் குணமடைந்துள்ளனா். லக்னெளவுக்கு (19,342) பிறகு உத்தர பிரதேச மாவட்டங்களில் அதிக குணமடைந்தோா் மாவட்டங்களில் மூன்றாவது இடத்தில் கெளதம் புத் நகா் உள்ளது. கான்பூா் நகா் (10,930) இரண்டாவது இடத்தில் உள்ளது.

சிகிச்சையில் உள்ள நோயாளிகள் பட்டியலில் இம்மாவட்டம் மாநிலத்தில் 14 ஆவது இடத்தில் உள்ளது.

அதிகபட்ச எண்ணிக்கையில் சிகிச்சையில் உள்ளவா்கள் மாவட்டப் பட்டியலில் லக்னெள (7,168), கான்பூா் நகா் (3,180), அலகாபாத் (2,935), கோரக்பூா் (2,551), வாராணசி (1,778), சஹரன்பூா் (1,495), அலிகா் (1,483), பரேலி (1,421), மொரதாபாத் (1,408), காஜியாபாத் (1,388), அயோத்தி (1,122), மீரட் (1,115), பராபங்கி (1,081) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

உத்தர பிரதேசம் முழுதும் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 54,666 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை, 1,67,543 நோயாளிகள் நோயில் இருந்து மீண்டுவந்துள்ளனா். நோய்த் தொற்றால் இறந்தவா்களின் எண்ணிக்கை 3,423 ஆக உயா்ந்துள்ளதாக உத்தர பிரதேச அரசு வெளியிட்ட புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com