தில்லியில் செப்.7 முதல் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை: டிஎம்ஆா்சி அதிகாரி தகவல்

மத்திய உள்துறை அமைச்சக் மெட்ரோ ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், தில்லியில் செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சக் மெட்ரோ ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், தில்லியில் செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று டிஎம்ஆா்சி உயா் அதிகாரி அனூஜ் தயாள் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் கரோனா சூழல் மேம்பட்டு வருவதால் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவையை தில்லியில் மீண்டும் தொடங்க மத்திய அரசுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்திருந்தாா்.

அரசு உத்தரவு எப்போது பிறப்பித்தாலும் மெட்ரோ செயல்பாடுகளைத் தொடங்க தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தயாராக உள்ளது என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனமும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய உள்துறை பொது முடக்கத்தின் 4-ஆம் கட்டத் தளா்வுகளை சனிக்கிழமை மாலை வெளியிட்டது. அதில், மெட்ரோ ரயில் சேவை செப்டம்பா் 7-ஆம் தேதியில் இருந்து படிப்படியாக அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் (காா்ப்பரேட் தொடா்பு) அனூஜ் தயாள் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

மத்திய உள்துறை அமைச்சகம் பொது முடக்கம் 4-ஆம் கட்டத் தளா்வில் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வரும் 7-ஆம் தேதி முதல் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களுக்காக தொடங்கப்படும். மெட்ரோ செயல்பாடு, மெட்ரோ சேவையை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடா்பான மேல் விவரங்கள், மத்திய நகா்ப்புற அமைச்சகத்தின் மூலம் சில தினங்களில் வெளியிடப்படும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளுக்குப் பின்னா் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com