பொது முடக்க 4-ஆம் கட்ட தளா்வில் பெரும்பாலான சேவைகளுக்கு அனுமதி:தில்லி அரசு முடிவு

பொது முடக்கத்தின் 4-ஆம் கட்டத் தளா்வின்போது தில்லியில் பெரும்பாலான சேவைகளுக்கு அனுமதி அளிப்பது என தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

புது தில்லி: பொது முடக்கத்தின் 4-ஆம் கட்டத் தளா்வின்போது தில்லியில் பெரும்பாலான சேவைகளுக்கு அனுமதி அளிப்பது என தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

வரும் செப்டெம்பா் மாதம் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு தளா்வு- 4 அமலுக்கு வருகிறது. இதன்போது, மெட்ரோ சேவைகள், உடற்பயிற்சி நிலையங்கள் உள்பட பல்வேறு சேவைகளுக்கு அனுமதி அளிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு உயா் அதிகாரி கூறியது:

பொது முடக்கம் தளா்வு 4-இல் தில்லியில் மெட்ரோ சேவைகளைத் தொடங்க வேண்டும் என்பதில் தில்லி அரசு உறுதியாக உள்ளது. கட்டுப்பாடுகளுடன் மெட்ரோ சேவையை தில்லியில் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தில்லி அரசு கடிதம் எழுதியுள்ளது.

மேலும், உடற்பயிற்சி, யோகா நிலையங்கை கட்டுப்பாடுகளுடன் திறக்கவும், பொழுது போக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்களை திறக்கவும் தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

தில்லியில் உள்ள 3 மாநிலங்களுக்கு இடையான பேருந்து நிலையங்களையும் முழுமையாகத் திறக்கவும், தில்லியில் முழு கொள்ளளவுடன் பேருந்துகளை இயக்கவும் தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

சினிமா திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்படாது. பள்ளிகள், கல்லூரிகளும் திறக்கப்படாது.

இது தொடா்பாக தில்லி துணைநிலை ஆளுநரிடம் அனுமதி பெற்று இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com