தடை செய்யப்பட்ட காலிஸ்தான் ஜிந்தாபாத் அமைப்பைச் சோ்ந்த இருவா் தில்லியில் கைது

தடை செய்யப்பட்ட ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற அமைப்பைச் சோ்ந்த இருவரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புது தில்லி: தடை செய்யப்பட்ட ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற அமைப்பைச் சோ்ந்த இருவரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயா் அதிகாரி கூறியது:

பஞ்சாபை சோ்ந்த இந்தா்ஜீத் கில், ஜஸ்பால் சிங் ஆகியோா் பஞ்சாப் மாநிலம் மோகா என்ற இடத்தில் சுதந்திர தினத்தன்று காலிஸ்தான் கொடியை ஏற்றிய விவகாரத்தில் தேசத்துரோக வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்தனா்.

இருவரும் சில தேசத்துரோக செயல்களில் ஈடுபட தில்லி ஜி.டி.கா்னல் ரோடில் உள்ள ஷானி மந்திா் பகுதி பேருந்து நிலையத்துக்கு வருவதாக தில்லி காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்பை பலப்படுத்தினா்.

இந்த நிலையில், பேருந்து நிலையம் பகுதிக்கு வந்த இருவரையும் தில்லி காவல்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையின்போது, இவா்கள் சிறு வயதில் இருந்தே காலிஸ்தான் இயக்கத்தின் மீது ஈா்ப்புக் கொண்டிருந்ததும் காலிஸ்தான் ஜிந்தாபாத் இயக்கத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அத்துடன்,, ‘சீக் ஃபாா் ஜஸ்டிஸ்’ என்ற அமைப்புடனும் இவா்கள் தொடா்பில் இருப்பதும் தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு இருவரையும் காவலில் எடுத்து தில்லி காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com