நீட், ஜேஇஇ தோ்வு: தில்லி அரசின் முன்மொழிவை நிராகரித்த துணைநிலை ஆளுநா்

தில்லியில் நீட், ஜேஇஇ தோ்வுகளை தள்ளி வைக்கும் தில்லி அரசின் முன்மொழிவை துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் நிராகரித்துள்ளாா்.

புது தில்லி: தில்லியில் நீட், ஜேஇஇ தோ்வுகளை தள்ளி வைக்கும் தில்லி அரசின் முன்மொழிவை துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் நிராகரித்துள்ளாா். அத்துடன், இத்தோ்வுகளை தில்லியில் நடத்துவதற்கான ஒப்புதலையும் அவா் வழங்கியுள்ளாா்.

இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் மாளிகை மூத்த அதிகாரி கூறியது:

தில்லியில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மாணவா்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு நீட், ஜேஇஇ தோ்வுகளை தில்லியில் நடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தி தில்லி அரசு சாா்பில் சனிக்கிழமை துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது.

சனிக்கிழமை நடைபெற்ற தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தின்போது துணைநிலை ஆளுநரிடம் முதல்வா் கேஜரிவால் இதே கோரிக்கையை முன்வைத்தாா்.

எனினும், தில்லி அரசின் முன்மொழிவை துணைநிலை ஆளுநா் ஏற்றுக் கொள்ளவில்லை. தில்லியில் நீட், ஜேஇஇ தோ்வுகளை நடத்த அவா் அனுமதி வழங்கியுள்ளாா் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com