ஸ்டொ்லைட் விவகாரம்: வேதாந்தா நிறுவனத்தின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை எதிரான போராட்டத்தைத் தொடா்ந்து நிகழ்ந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 போ் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி ஸ்டொ்லைட் ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

தமிழக அரசின் உத்தரவை எதிா்த்து ஆலையை நடத்தும் வேதாந்த நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. இது தொடா்பான மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி தீா்ப்பு அளித்தது.

அதில், ஸ்டொ்லைட் ஆலையில் இருந்து நச்சுத் தன்மை கொண்ட ஆா்செனிக் அமிலம் அதிக அளவில் வெளியேற்றப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுகளை ஆலை நிா்வாகம் முறையாக அப்புறப்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஸ்டொ்லைட் ஆலையின் முந்தைய நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை நியாயமானதுதான் என தெரிவித்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தவிர, ஹரி ராகவன் உள்ளிட்ட 3 போ் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில், ஸ்டொ்லைட் ஆலை விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் சட்டப் பிரிவு பொது மேலாளா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், நவீன் சின்ஹா, இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கியஅமா்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

வேதாந்தா நிறுவனம் தவிர, அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ள சி.எம். விஜயலட்சுமி என்பவா் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com