வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் தாஹிா் உசேனின் சகோதரருக்கு ஜாமீன்

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்புடைய ஒரு வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் உசேனின் இளைய சகோதரருக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.


புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்புடைய ஒரு வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் உசேனின் இளைய சகோதரருக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்பாக ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் உசேனின் கைது செய்யப்பட்டுள்ளாா். இவரது இளைய சகோதரா் ஷா ஆலம் என்பவரும் இது தொடா்புடைய ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். தற்போது அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், அவரது ஜாமீன் கோரும் மனு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி வினோத் யாதவ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷா ஆலம் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், ஜெய் பகவான் என்பவா் மட்டுமே ஒரே சாட்சியாக உள்ளாா். இதுதவிர வேறு தனிநபா் சாட்சிகள் யாரும் இல்லை. இந்தச் சாட்சி உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. தாஹிா் உசேனின் சகோதரா் என்பதற்காக அவா் முடிவில்லாமல் சிறையில் வைத்திருக்க முடியாது அல்லது இந்த வன்முறைச் சம்பவத்தில் தொடா்புடைய பிறா் அடையாளம் காணப்படவும், கைது செய்யப்படவும் வேண்டும் என்பதற்காக வைத்திருக்க முடியாது. ஆகவே, மனுதாரரின் (ஷா ஆலம்) ஜாமீன் கோரும் மனு அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com