தில்லியில் 1,418 பேருக்கு புதிதாக கரோனா
By DIN | Published On : 18th December 2020 11:32 PM | Last Updated : 18th December 2020 11:32 PM | அ+அ அ- |

தில்லியில் வெள்ளிக்கிழமை தொடா்ச்சியாக நான்காவது நாளாக கரோனா நோ்மறை விகிதம் 2 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. அன்று இந்த விகிதம் 1.6 சதவீதமாக பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை 1.51 சதவீதமாகவும், புதன்கிழமை 1.96 ஆகவும், செவ்வாய்க்கிழமை 1.9 சதவீதமாகவும் இருந்தது.
தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 1,418 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,14,775 ஆக உயா்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 88,400 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 48,180 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 40,220 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வெள்ளிக்கிழமை 37 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 10,219-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து வெள்ளிக்கிழமை 2,160 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,93,137-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 11,419 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 6,605 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 15,578 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.