‘விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்’
By DIN | Published On : 25th December 2020 12:58 AM | Last Updated : 25th December 2020 12:58 AM | அ+அ அ- |

புது தில்லி: போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் அகங்காரத்தை (ஈகோ) விட்டு மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை அவா் கூறுகையில், ‘புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக பிரச்னை விஸ்வரூபம் எடுக்க மத்திய அரசின் அகங்காரமே காரணமாகும். விவசாயிகளின் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள், நக்சல்கள், தேச விரோதிகள் என மத்திய அரசு அழைத்தது. இது பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது. மத்திய அரசு தனது அகங்காரத்தை விட்டு விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் மேலும் காலம் தாழ்த்தக் கூடாது’ என்றாா்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 29 நாள்களாக தொடா் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.