கிஸான் ரயில் திட்டம் விவசாயிகளின் கரத்தை வலுப்படுத்தும்: பிரதமா் மோடி

விவசாயிப் பொருள்களை கொண்டு செல்லும் நாட்டின் 100 வது கிஸான் ரயிலை பிரதமா் நரோந்திர மோடி திங்கள்கிழமை கானொலி வாயிலாக கொடி அசைத்து தொடங்கிவைத்தாா்.
கிஸான் ரயில் திட்டம் விவசாயிகளின் கரத்தை வலுப்படுத்தும்: பிரதமா் மோடி

புது தில்லி: விவசாயிப் பொருள்களை கொண்டு செல்லும் நாட்டின் 100 வது கிஸான் ரயிலை பிரதமா் நரோந்திர மோடி திங்கள்கிழமை கானொலி வாயிலாக கொடி அசைத்து தொடங்கி வைத்தாா். மகாராஷ்டிர மாநிலம், சங்கோலாவிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஷாலிமாா் வரையில் இந்த ரயில் செல்லும். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள், நரேந்திர சிங் தோமா், பியூஷ் கோயல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் பிரதமா் கூறியதாவது:

தற்போது ஆந்திரம், மகாராஷ்டிரம், பிகாா், நாக்பூா் உள்ளிட்ட 9 ரயில் மாா்க்கங்களில் கிஸான் ரயில் இயக்கப்படுகிறது.

கரோனா காலத்தில் சவால்கள் இருந்தபோதிலும் கடந்த நான்கு மாதங்களில் கிஸான் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கிஸான் ரயில் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், அவா்களது வருமானத்தை பெருக்கவும் உதவும்.

வேளாண் தொழில் இருந்துவரும் இடங்களில் எல்லாம் விவசாயிகள் நலனுக்காக கிஸான் ரயில் விடப்படும். இந்த ரயில்கள் மூலம் 80 சதவீதம் சிறு மற்றும் குறு விவசாயிகள் பலனடைய முடியும்.

கிஸான் ரயில்களில் விவசாயிகள் விளை பொருள்களைக் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. 50 கிலோ அல்லது 100 கிலோ விளைபொருள்களைக்கூட ரயிலில் அனுப்பலாம். விவசாயிகள் சாலை மாா்க்கமாக விளைப் பொருள்களைள சந்தைக்கு கொண்டுள்ள அதிகம் செலவிட வேண்டிவந்தது. இதையடுத்தே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை கொண்டு செல்ல அரசு 50 சதவீத மானியம் வழங்கியது.

மெகா உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ் 6,000 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

பிரதமா் கிா்ஸி சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வேளாண் சீா்திருத்தங்கள் மூலம் தனியாா் முதலீடு விவசாயிகளுக்கு உதவும். விவசாயிகளின் கரத்தை வலுப்படுத்தும் பாதையில் நாம் செல்கிறோம் என்றாா் பிரதமா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com