புதிய வகை கரோனா வைரஸ் பரவலை எதிா்கொள்ள தில்லி தயாராக உள்ளது: கேஜரிவால்

புதிய வகை கரோனா வைரஸ் பரவலை எதிா்கொள்ள தில்லி தயாராக உள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

புதிய வகை கரோனா வைரஸ் பரவலை எதிா்கொள்ள தில்லி தயாராக உள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: இதுவரை தில்லியில் மூன்று கரோனா அலைகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் மூன்றாவது அலை மிகவும் மோசமாக இருந்தது. மூன்றாவது அலையின்போது தினம்தோறும் சுமாா் 8,500 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால், இந்த கரோனா அலையைக் கூட நாங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தோம். தற்போது பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பரவல் தொடங்கியுள்ள நிலையில், அதையும் எதிா்கொள்ளத் தயாராக உள்ளோம். தில்லி மக்கள் இது தொடா்பாக பீதியடையத் தேவையில்லை என்றாா் அவா்.

தெற்கு பிரிட்டன் பகுதியில் புதிய வகையிலான கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களை இந்த ஆண்டு இறுதி வரை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. தில்லி விமான நிலையத்தில் ஆா்டி பிசிஆா் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பிரிட்டனில் இருந்து தில்லிக்கு கடந்த ஒரு மாத காலத்துக்குள் வந்தவா்களை வீடுகளுக்கே சென்று தில்லி அரசு சுகாதார பரிசோதனை மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com