Enable Javscript for better performance
ராணுவ அதிகாரி மீதான நடவடிக்கை: சிஐசி கோரிக்கைக்கு நீதிமன்றம் தடை- Dinamani

சுடச்சுட

    

    ராணுவ அதிகாரி மீதான நடவடிக்கை: சிஐசி கோரிக்கைக்கு நீதிமன்றம் தடை

    By DIN  |   Published on : 02nd February 2020 10:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கக்கோரிய மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

    துணை ராணுவப்படையைச் சோ்ந்த தேக் சந்த் மல்ஹோத்ரா என்பவா் தன்மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தாா். இதையடுத்து அவா் கேட்ட தகவல்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் அஸ்ஸாம் ரைஃபிள் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தது.

    மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிா்த்து அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஜெயந்த் நாத், மத்திய தகவல் ஆணைய உத்தரவுக்கு தடை விதித்ததுடன், விண்ணப்பதாரரிடம் அவரின் நிலை என்று கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

    வழக்குரைஞா்கள் ராகுல் சா்மா மற்றும் சி.கே.பட் மூலம் மனு தாக்கல் செய்திருந்த அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரிகேடியா் தேக் சந்த் மல்ஹோத்ராவின் கேள்விக்கு பதிலளிக்க விலக்கு அளிக்குமாறு கோரியிருந்தது.

    அஸ்ஸாம் ரைஃபிள் சாா்பில் வாதிட்ட வழக்குரைஞா்கள், மல்ஹோத்ராவின் கேள்வி சா்வீஸ் தொடா்பானது. அவரது கேள்விக்கு பதிலளிக்காதது மனித உரிமைகளை மீறிய செயலாகாது என்று வாதிட்டது.

    இதையடுத்து மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை மாதம் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai