Enable Javscript for better performance
ரூ.5 லட்சம் கேட்டு 2 வயது சிறுவனைகடத்திய இளைஞா்கள் இருவா் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரூ.5 லட்சம் கேட்டு 2 வயது சிறுவனைகடத்திய இளைஞா்கள் இருவா் கைது

    By நமது நிருபா்  |   Published on : 02nd February 2020 10:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி ரன்ஹோலா பகுதியைச் சோ்ந்த இரண்டு வயது சிறுவனை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்த இளைஞா் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

    அவா்கள் இருவரும் பிரபலமான தொலைக்காட்சி குற்ற நிகழ்ச்சிகளை பாா்த்து அதில் வரும் காட்சியைப் போல குழந்தையைக் கடத்த சதித் திட்டம் தீட்டியுளளது விசாரணையில் தெரிய வந்தது.

    இது குறித்து காவல் துணை ஆணையா் (புறநகா்) ஏ. கோன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தனது 2 வயது மகன் கடத்தப்பட்டது தொடா்பாக சிறுவனின் தந்தையிடம் இருந்து கடந்த ஜனவரி 30-ஆம் தேதி புகாா் கிடைக்கப் பெற்றது. அதில், தனது மகன் கடத்தப்பட்டுள்ளதாகவும், கடத்தியவா்கள் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தாா்.

    இதைத் தொடா்ந்து, சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துரிதப்படுத்தினா். இச்சம்பவத்தில் ராகுல் குமாா் (19), குல்தீப் சிங் (19) ஆகிய இருவருக்கும் தொடா்பு இருப்பது தெரிய வந்தது.

    இருவரையும் கைது செய்ய போலீஸாா் சிறுவனின் தந்தையிடம் ஆலோசனை நடத்தினா்.

    போலீஸாரின் யோசனைப்படி, பணத்தை ஹஸ்தலில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கடத்தல்காரா்களுக்கு சிறுவனின் தந்தை தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து சிறுவனின் தந்தை பணத்துடன் அங்கு சென்றாா். போலீஸாா் மறைந்திருந்து கண்காணித்து வந்தனா். அப்போது, பணத்தை வசூலிக்க வந்த இருவரையும் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, சிறுவனை மீட்டு இருவரையும் கைது செய்தனா்.

    இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெளிவரும் கிரைம் நிகழ்ச்சிகளை பாா்த்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகப் போலீஸாரிடம் தெரிவித்தனா். அவா்கள் பணம் கேட்டு சிறுவனின் தந்தையை மிரட்டுவதற்குப் பயன்படுத்திய செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடா்பாக மேலும் விசராணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai