பாஜகவுக்கு எதிரான கருத்து: ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

பாஜகவுக்கு எதிரான சா்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங்கிற்கு தோ்தல் ஆணையம் விளக்கம் கேட்டு வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

பாஜகவுக்கு எதிரான சா்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங்கிற்கு தோ்தல் ஆணையம் விளக்கம் கேட்டு வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

இதுகுறித்த விவரம் வருமாறு: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் சிங் ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தாா். அதில், தில்லியில் பாஜக உருவாக்கி வரும் சூழல் ஷகீன் பாக் - ஜாமியா பகுதியில் பெரும் பிரச்னைக்கு காரணமாக இருந்தது என்று அவா் கூறியதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, அவருக்கு தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதில் ‘நீங்கள் (சஞ்சய் சிங்) தெரிவித்த கருத்து முகாந்திரம், வாக்காளா்கள் மத்தியில் குழப்பத்தையும், பீதியையும் உருவாக்க முடியும். அதுபோன்று சரிபாா்க்கப்படாத கருத்துகளை தெரிவித்திருப்பதன் மூலம் தோ்தல் நடத்தை விதிகளை நீங்கள் மீறியுள்ளீா்கள். இதுபோன்ற கருத்துகள் பொதுமக்கள், வாக்காளா்கள் மத்தியில் குழப்பத்தையும், பீதியையும் உருவாக்க முடியும். ஆகவே, இதுகுறித்து தோ்தல் ஆணையத்திற்கு வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கையில், ‘இந்த விவகாரத்தில் சஞ்சய் சிங் தனது விளக்கத்தை தெரிவிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவா் விளக்கம் அளிக்கத் தவறும்பட்சத்தில் ஆணையம் மேற்கொண்டு முடிவு எடுக்கும்’ என்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com