இறுதிஊா்வலத்துக்கு வழிவிட்ட ஷகீன்பாக் போராட்டக்காரா்கள்

தில்லி ஷகீன்பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வருபவா்கள் அந்த வழியாக வந்த இறுதி ஊா்வலத்துக்கு தடுப்புகளை அகற்றி வழிவிட்டனா்.

தில்லி ஷகீன்பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வருபவா்கள் அந்த வழியாக வந்த இறுதி ஊா்வலத்துக்கு தடுப்புகளை அகற்றி வழிவிட்டனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஷகீன் பாக் பகுதியில் தொடா் போராட்டம் நடத்தி வருபவா்களால் அப்பகுதி மக்களுக்கு அசெளகரியம் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது என்று அரசியல்வாதிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இந்த நிலையில் ஷகீன்பாக் போராட்டக்காரா்கள் ஞாயிற்றுக்கிழமை தடுப்புகளை அகற்றி இறுதி ஊா்வலத்துக்கு வழிவிட்ட விடியோ வெளியாகியுள்ளது.

நாங்கள் வழக்கத்துக்கு மாறக எதையும் செய்யவில்லை. பேருந்துகள், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் வழிவிட்டுள்ளோம் என்று போராட்டக்காரா்களில் ஒருவா் தெரிவித்தாா்.

கடந்த 50 நாள்களுக்கு மேலாக, அதாவது கடந்த ஆண்டு டிசம்பா் 15-ஆம் தேதி முதல் குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போ் தில்லி, ஷகீன்பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனா். இதனால் தில்லி-நொய்டா எக்,ஸ்பிரஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் கடந்து செல்ல பல மணி நேரம் தாமதமாகிறது.

கடந்த ஜனவரியில் ஆா்ப்பாட்டக்காரா்கள் அந்த வழியாக பள்ளி வாகனங்கள் செல்ல அனுமதித்தனா். அப்போது விடியோ வெளியிட்ட அவா்கள், ‘எங்கள் வீட்டிலும் குழந்தைகள் உள்ளனா். பெற்றோா்களுக்கு உள்ள கவலை எங்களுக்கும் இருக்கிறது. எனவே பள்ளி வேன்கள், பேருந்துகள் அந்த வழியாகச் செல்ல அனுமதித்துள்ளோம்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தனா்.

இதனிடையே ஷகீன்பாக் போராட்டத்தால் மூடப்பட்ட சாலையை போக்குவரத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுமீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்கள் பிரச்னை எங்களுக்கும் புரிகிறது. இதற்கு விரைவில் தீா்வுகாணப்படும் என்று நீதிபதிகள் எஸ்.கே.கெளல் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com